Danforth பிரதேசம் என்பது Toronto வினுடைய ஒரு மிகவும் உயிர்த்துடிப்பு முனைப்புள்ள சமூகக்கட்டமைப்பினை உடைய அயற்சுற்றாடலைக்கொண்டு மக்கள் வசிக்கும் ஒரு பிரதேசம்.இந்தச்சமூகத்தில் வேலை செய்வதற்கு எமக்கு விருப்பம், Alan Spergel அவர்களினாலே 1990 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பழைமை வாய்ந்த Spergel பணிமனைகளுள் ஒன்றாகும். இந்த அலுவலகம் (பணிமனை) எங்களது வீட்டிற்கு வருகை தருவது போன்ற ஒரு மனச்சாந்தி அளிக்கும் சூழ்நிலையைக்கொடுக்கின்றது.பெருமளவிலான மன அழுத்தத்துடனேயே எமது கட்சிக்காரர் எமது வாயில் கதவுகளினூடே வருகின்றார்கள் என எமக்குத்தெரியும். ஆகவே எமது அணுகுமுறையினை ஒரு குறிப்பிட்ட நோக்கம் கருதி அவரவர்க்கேற்ற முறையில் ஒவ்வொருவரதும் சில நிதிச்சுமையில் ஆறுதல் அளிக்கின்ற வகையில் இருப்பதனை உறுதிசெய்கின்றோம். மனதுக்கு இதமாக வரவேற்கும் எமது பணிமனைச்சூழல் என்பது ஒவ்வொருகட்சிக்காரரும் எமது பணிமனை கதவுகள் ஊடே நுழையும்போது அவர்களுக்குத்தெரியும் நாம் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக உள்ளோம் என்பதனை.

கட்சிக்காரர் எங்களை உண்மையாகவே கவனித்துக்கொள்கிறீர்கள் என்று பல தடவைகள் நன்றியுணர்வுடன் பாராட்டுவதாகக்கூறுவர். எங்களது கவனிப்பும் பரிவு இரக்கசிந்தைச்சுபாவமும் நாம் இருந்து உங்களது சவால்களைச்செவிமடுக்கும் விதமும் வெளிக்காட்டப்படுவதுடன் உங்களது மன அழுத்தத்தைக்குறைக்கும் விதத்தில் எமது உதவி தீர்வுகளாகக்கிடைக்கும். எதிர்காலத்துக்கான எமது பார்வை நோக்கம் என்பது எமது சமூகத்துடன் தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருப்பதன் மூலம் எமது முயற்சி வேலைத்திட்டத்தின் தாக்கத்தினை இங்கேயே எங்களது பணிமனைப்பின்புறத்திலேயே காணலாம்.

Spergel_Headshot_AlanSpergel

Jeff Adiken

B. Soc. Sc., CGA, CIRP, Trustee in Bankruptcy

TRUSTEE

Toronto Office

Direct Phone/Fax: (416) 498-4322
Email: jadiken@spergel.ca

 

Jeff 18 வருடங்களுக்கும் மேலாகச்சேவையாற்றி Spergel அணிக்குச் செழுமை பொருந்திய அனுபவத்தைச் சேர்த்துள்ளார். வங்குரோத்துச்சம்பந்தமான அனுமதிப்பத்திரம் பெற்ற ஒரு நம்பிக்கைப்பொறுப்பாளர். அவர் தன்னுடைய கட்சிக்காரர்களைக்கையாளுவதுடன் தனிப்பட்ட கடன் மீளளிக்க முடியாத பணிமனைகளின் நிர்வாகத்தினையும் மேற்பார்வை செய்கின்றார். மக்களைச்சந்தித்து அவர்களின் கடன் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவி புரிந்து அவர்களை மீண்டும் ஒரு பாதைக்கு இட்டுச்செல்ல அனுமதிப்பதில் இன்பம் காண்பவர். தற்போதைய நிலைமைக்கு இட்டுச்சென்ற காரணிகளை அதாவது தனிப்பட்ட பிரச்சினைகளாகவோ அல்லது நிதி சம்பந்தமாக உள்ள விடயங்களுக்கான வழிகாட்டல் மற்றும் தமது கட்சிக்காரர்களூக்கான ஆலோசனை வழங்குவதற்கும் அவர் எப்பொழுதும் தன்னைத்தயாராக வைத்திருப்பார்.

மக்களினுடைய நிதிப்பிரச்சினைகளுக்கு ஏற்பவும் தேவைகளுக்கு ஏற்பவும் தீர்வுகளை அது நோக்கியதாக இருக்கச்செய்வதில் Jeff சிறந்த முறையில் செவிமடுத்து அதனைக்கையாள்வதில் பெருமை கொள்பவர். சக பணியாளர்களுக்கும்,கட்சிக்காரர்களுக்கும் இரு சாராருக்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதில் கடன் மீளளிக்க முடியாத சமூகத்தில் இவர் மிகவும் நன்கு தெரிந்தவராக உள்ளார். நகர்ப்புரத்தைச்சூழ பல வேறுபட்ட முயற்சிகளுக்கு ஆதரவு வழங்குவதிலும் பெருமளவில் சமூகச்சிந்தனையுடன் செயலாற்றுபவர். வேலை நேரம் தவிர்ந்த நேரத்தில் குடும்பத்துடன் செலவிடுவதில் மகிழ்ச்சி அடைவார்.