நுகர்வோருக்கான முன்மொழிவுத்திட்டம் என்றால் என்ன ?

நுகர்வோரிற்கான ( பாவனையாளரிற்கான ) முன்மொழிவுத் திட்டம் எனப்படுவது முறைசார் கேள்வியொன்றினை உங்கள் கடன் வழங்குனர்களுக்கு கடனைத்தீர்ப்பதற்காகக் கொடுப்பது ஆகும்.பொதுவாக இது நீங்கள் கொடுக்க வேண்டிய தொகையிலும் குறைவாகவும், நீங்கள் வங்குரோத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்குமிடத்து கடன் வழங்குனரிற்குக் கூடுதலாகக் கிடைத்திருக்கக்கூடிய தொகையிலும் பார்க்கக் குறைவானதாகவேயிருக்கும்.உங்களது எல்லாக் கடன்வளங்குனர்களுக்கும் யதார்த்தமாக ஒரு குறித்த கால அளவிடையில் கொடுக்கக்கூடிய தொகையினை நீங்கள் கொடுப்பனவாகக் கொடுக்க வேண்டியிருக்கும்—அதிகமாக 5 வருடங்களாகவிருக்கும். வங்குரோத்து நிலை முன்மொழிவுத்திட்டம் ஒன்றைக் கொடுப்பதன் நன்மை யாதெனில் பொதுவாக நீங்கள் உங்கள் சொத்துக்களைத் தொடர்ந்து வைத்திருக்க முடியும்.உங்கள் கடன் வழங்குனர்களினால் அங்கீகரிக்கப்படின் உங்களிற்கிடையில் ஒரு இணக்கத்துடனான ஒப்பந்தம் இருக்கும்.ஏற்றுக்கொள்ளப்பட்டமைக்கமைய உங்களது கொடுப்பனவுகளைச் செலுத்துங்கள். இதனைவிட மேலதிகமாக உங்களுக்கு எத்தகைய கடப்பாடும் உங்களுடைய கடன் வழங்குனரிற்காக இருக்காது. உங்கள் பிரதேசத்திலுள்ள அர்ப்பணிப்புள்ள ஒரு வல்லுநரிற்கு இப்பொழுதே அழைப்பை ஏற்படுத்தி உரையாடுங்கள் அல்லது மின்னஞ்சல் அனுப்பவும். (இவ்விரண்டுமே கோடிட்டு அல்லது நிறமூட்டி காட்டப்பட்டமை எமது தொடர்பிற்கான பக்கத்திற்கு இட்டுச் செல்லும்).

Spergel னுடைய வழக்கமான முன்மொழிவுத்திட்டம் வருடத்தின் சில காலத்தில் பணம் பற்றிய சுயாதீனத்தன்மைக்கும், முழுக்காலப் பகுதியிலும் எப்பொழுது கூடுதலான பணம் தேவைப்படுகின்றதோ அதற்கு உதவி செய்வதாக அமையும். ஒன்று அல்லது இரண்டு வழிகளினால் உங்களது கொடுப்பனவு அட்டவணையைச் சீர்செய்வதன் மூலம் இதனை அடையலாம்:

  • மாதாந்தக் கொடுப்பனவை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு வருடத்தில் சில காலங்களில் கூடுதலாகவும் ,குறைவாகவும் பெறுமதியுள்ள கொடுப்பனவை மேற்கொள்ளலாம்; அல்லது
  • கொடுப்பனவுக்காலத்தை அதிகரிப்பதன் மூலம் எவ்வித கொடுப்பனவுகளையும் சில மாதங்களிற்கு இல்லாமல் செய்ய அனுமதிக்கலாம்.